Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“I LOVE YOU”…. தோழியே என்னை ஏற்றுக்கொள்….. “ஸ்டேடியத்தில் காதலை சொன்ன இளைஞர்”…. அப்புறம் என்னாச்சு… ஓகேதான்..!!

இந்தியா – நெதர்லாந்து போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றுப்போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் நேற்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து அந்த இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 20 ஓவர் 9 விக்கெட் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, இந்திய அணி பந்துவீசும்போது  மைதானத்தின் பார்வையாளர் இடத்திலிருந்து போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.. அதற்காக ஒரு மோதிரத்தையும் அவர் கொண்டு வந்திருப்பார் போல.. திடீரென எழுந்து உட்கார்ந்திருந்த தனது தோழியிடம் காதலை சொல்ல, அவர் சற்று இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் புன்னகைத்தார். அவரும் காதலை ஏற்றுக் கொண்டார். பின் அந்த பெண்ணுக்கு மோதிரத்தை மாட்டிவிட்டார்.

அதன்பின் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த காட்சியை அங்கிருந்த ரசிகர்கள் அனைவருமே சுற்றி நின்று பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த காட்சி டிவி மற்றும் செல்போன் வழியாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் வெகுவாக கவர, அவர்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. நெதர்லாந்து அணி பேட்டிங் செய்யும்போது 7ஆவது ஓவரின் போது தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது..

கிரிக்கெட் மைதானத்தில் காதலை சொலவ்து இது முதல் முறை அல்ல இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர், ஹாங்காங் கிரிக்கெட் வீரர் மற்றும் அங்கு போட்டியை காண வரும் பலரும் இதே போல ஸ்டேடியத்தில் தோழியிடம் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்த வீடியோவை  ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. இது தற்போது வைரலாகி வருகிறது. அதேசமயம் ட்விட்டரிலும் இது வைரலாகி வருகிறது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

Categories

Tech |