Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சும்மா தான் பேசுனேன்… பாதி எறிந்த சிறுமியின் உடல்… 4 பேர் மீது நடவடிக்கை…!!

திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியில் வைத்து ஒரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் இளைஞரையும், சிறுமியையும் கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி மிகவும் மனமுடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமி மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பாதி எறிந்த நிலையில் இருந்த சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை கண்டித்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசிய முருகன்(44), ஜான்(24), பிரகாஷ்(25), புலிக்குட்டி(23) ஆகிய 4 பேரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |