ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய போது, நான் 2G-யை பார்த்தவன். இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. நீங்க சொல்றது கரெக்ட் அப்போ இருந்த இந்துமதம் இப்ப இல்லைன்னு சொல்றீங்க. எனக்கு ஒரு கேள்வி. ஏன் பெரியார் திடலில் இந்து மதத்தில் இப்படி இருக்குன்னு நான் சொன்னேன் ? இந்துக்களுக்கு ராசா எதிரியா ? இந்துக்களுக்கு கருணாநிதி எதிரியா ? கண்ணப்பன் எதிரியா ? வேல் எதிரியா ? இல்ல நீங்க தான் எதிரியா ? இந்துக்களுக்கு யாரும் எதிரி இல்லை.
நான் கேட்கிறேன் 1951ல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் கொண்டு வந்தார் பெரியார். இட ஒதுக்கீடு இருந்தது. அது வேண்டாம் என இரண்டு பிராமணர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு போனாங்க. உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது என சொன்னார்கள். யார் பிற்படுத்தப்பட்ட மக்கள் ? கவுண்டரு, தேவரு, நாடார், யாதவர், வன்னியர், செட்டியர், நாயுடு இவங்க தான.
இவர்களுக்கு இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டது யாரு ? திராவிட இயக்கம். இவர்களுக்கு இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டது யாரு பெரியார், அண்ணா. 60% இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களை நீ இந்துக்களாக வைத்திருக்கிறாய். அந்த இந்துக்களுக்காக உச்சநீதி மன்றத்திற்கு சென்று, அவர்களின் உரிமைகளை போராடி பெற்றுத் தந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட கழகமும். நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல என தெரிவித்தார்.