இயக்குனர் லிங்குசாமி தவறான செய்தி பரப்பிய ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்கள் வந்து தங்களது வாக்கினை செலுத்தினர். மறுபுறம் சில திரைத்துறையினர் வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியானது. அதன்படி பிரபல இயக்குனர் லிங்குசாமி ஓட்டு போடவில்லை என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில் என் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன். சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறான செய்தி வெளியிட்டுள்ளது.
நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ள அவர் தான் ஓட்டு போட்ட விரல் மையுடன் கூடிய புகைப்படத்தை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
#TNAssemblyElection2021 pic.twitter.com/K3RwOKz2ey
— Lingusamy (@dirlingusamy) April 7, 2021