Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் தலைவர் கிடையாது” புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள்…. ராகுல் வேண்டுகோள்…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் கிடையாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது.

Image result for rahulgandhi

மேலும் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும்.அவரின் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதோடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களும் ராகுலிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை  கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு  செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |