Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னிடம் அதிகாரம் இல்லை…! நான் என்ன செய்ய முடியும் ? வேதனைப்பட்ட சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மணலை சட்டவிரோதமாக எடுத்துவிட்டு, மலையை குடைந்து எடுத்து விற்பதை சகிக்க முடியாது, ஏற்கமுடியாது என்ற உணர்வு என் மக்களுக்கு வரவேண்டும். அந்த விழிப்புணர்வு வரவேண்டும். அப்படி  வரும்போது தான்,  இந்த 2 ஆட்சியாளர்களை  நகர்த்துவிட்டு, புதிய ஆட்சியாளர் வரும்போது தான் மாற்று பிறக்கும்.

இப்போது மலேசியாவில்  மண்ணை அள்ளினால் தான் ஆற்றைக் காப்பாற்ற முடியும், அதுதான் எதார்த்த உண்மை. அப்போது மலேசியாவில் ஆற்று மணலை தருகிறேன் என்று சொல்கிறார்கள். அப்போது ஆத்து மணல் தூத்துக்குடி வரை வந்தது கப்பலில்….   ஏன் இறக்க விடல ?  ஏனென்றால் அந்த மணலை இறங்கி விட்டால், இந்த மணலை விற்பவர்களுக்கு லாபம் போய்விடும்.

அப்போது ஆற்றை காப்பாற்ற வேண்டுமென்றால் 100, 200 ஆண்டுகளுக்கு அந்த மணலை தொடாமல், அந்த மணலை இறக்கி இந்த மண்ணின் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டியது தானே. மலேசியா தான் தருகிறேன் என்று சொல்கிறார்களே, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கப்பலில் இறக்கி செய்துவிட வேண்டியது தானே.

இப்போது என்னிடம் அதிகாரம் இல்லை, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள் ? போராடுவதை தவிர வேறு வழி இருக்கா சொல்லுங்க. 10 வருடமாக நாங்கள் போராடியதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? 10 வருடமாக நான் போராடியதை பார்க்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என தெரிவித்தார்.

Categories

Tech |