நடிகை அஞ்சலி காதல் தோல்வி குறித்து முதல்முறையாக பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் சிலர் மட்டுமே ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை அஞ்சலி. இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் சொந்த விஷயங்களிலும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
குறிப்பாக பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வந்த இவர் திடீரென அவரை விட்டு பிரிந்தார். இந்நிலையில் காதல் தோல்வி குறித்து நடிகை அஞ்சலி முதல்முறையாக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் காதல் தோல்வியால் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.
இதிலிருந்து மீள எனது அம்மாதான் எனக்கு உதாரணமாக இருந்துள்ளார். என் அம்மா சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. அவரது வாழ்க்கை அவ்வளவு கடினமானது. மேலும் தற்போது எனது முழு கவனமும் சினிமா பயணத்தில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.