Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது 26 கேஸ் இருக்கு..! ஆன்ட்டி இந்துவா பேசணும்னு வாறீங்க..! கொதித்து போன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க.

நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன்  கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 ரூபாய். ஆஞ்சநேயருக்கு 25 பேர் பணம் கட்டிருக்காங்கன்னா… 25 மடங்கு பொருட்கள் வாங்கியா அபிஷேகம் பண்றாங்க ? அந்த பணம் என்ன ஆகிறது ?

யாரு திருடுறா? ஆகவே  இந்த அறநிலைத்துறை அப்படின்னு ஒன்னு இருக்கிறது,  கோவிலை அழிப்பதற்கான துறை. அதனால்தான் கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க என தெரிவித்தார்.

Categories

Tech |