Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கருத்து கணிப்பை நம்ப மாட்டேன் “வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய சூழ்ச்சி – மம்தா பானர்ஜி ட்விட்…!!

கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வதற்கு சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில்   543 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட  வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி செய்யும்  பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என  கூறப்படுகிறது.

Image result for Mamata Banerjee

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர்   மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :-

நான் கருத்துக்கணிப்புகளை நம்பவில்லை. கருத்துக்கணிப்புகள் மூலம்  ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதே திட்டமாக இருக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும்  இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Categories

Tech |