நாமக்கல் மாவட்டத்தில் மகளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலுள்ள கொசவம்பாளையத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகள் சந்தியாவிற்கு(20) கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அங்கிருந்து சண்டை போட்டு சந்தியா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சந்தியாவின் பெற்றோர் அவரை இடண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து சந்தியா இரண்டாவது திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.
ஆனாலும் அவரது பெற்றோர் மிகவும் கட்டாயபடுத்தியதால் மனமுடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர் சந்தியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.