தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கானின் ஜவான், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சில நடிகர்களுடன் சேர்ந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது யோகி பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய முகத்திற்கு தகுந்தார் போன்று ஏற்றார் போன்று அமையும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் நான் நடிக்க முடியும். அதேபோன்றுதான் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் என்னுடைய முகத்திற்கு தகுந்தார் போன்று ஒரு வேடம் கிடைத்துள்ளது. மேலும் என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.