Categories
தேசிய செய்திகள்

நான் உயிரோடு தான் இருக்கேன்… வைரலான வாட்ஸ்அப் வதந்தி… முற்றுப்புள்ளி வைத்த சக்திமான்…!!

சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருபுறம் இருக்க சமூக வலைத்தளங்களில் சில உண்மையான கருத்துக்கள் வந்தாலும், சில பொய்யான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அதேபோன்றுதான் 90’ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாடல் நிகழ்ச்சிகளில் ஒன்று சக்திமான்.

அந்த நிகழ்ச்சியில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா என்பவர் நடித்திருந்தார். அவர் கொரோனவால் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இனிது இனிது வதந்தி என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் முகேஷ் கண்ணா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் நான் மிகவும் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவையில்லாத பொய்யான கருத்துக்களை யாரும் பரப்பாதீர்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |