Categories
தேசிய செய்திகள்

“6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” குமாரசாமி உருக்கம்..!!

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேரவையில் குமாரசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார் 

கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்து. இதையடுத்து சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானம் கடந்த வியாழன் கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய குமாரசாமி, நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது. அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன்.

Image result for சட்டப்பேரவை குமாரசாமி

ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன். பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன். பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்தபோது எடியூரப்பா முதல்வராக வழி கொடுத்தேன். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நான் துரோகம் செய்யவில்லை. என்று உருக்கத்துடன் பேசினார்.

இதனிடையே பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன் காங்கிரஸ் கட்சியினர் சுயேச்சை எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தி  போராட்டம் நடத்தினர். அதே போல சுயேச்சை எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இரு தரப்பினருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெங்களூரு முழுவதும் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |