திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, பத்திரிக்கையாளர் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களை பரிதாபமாகி போய் இருக்கிறது. தகுதி உள்ள தலைவர் இடத்திலே மைக்கை நீட்டுங்கள், உங்களுக்கு தகுதி வாய்ந்த பதில் கிடைக்கும். ஆட்டுக்குட்டி அண்ணாமலை இடத்திலே நீட்டினால் உங்களை நாய் என்கிறார், பேய் என்கிறார், குரங்கு என்கிறான். நாங்கள் வருத்தப்படுகின்றோம்.
ஆனால் உங்களுக்கும் வக்காலத்து வாங்குகின்ற ஒரே இயக்கம் திமுகவும், எங்கள் தலைவரும், எங்கள் அமைச்சர் பெருமக்களும் தான். 1949 செப்டம்பர் 17 நாம் இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறோமே.. ஆர்மேனியன் தெரு. இந்த ஆர்மேனியன் தெருவினுடைய கடைசிக்கு போனால் வலப்பக்கத்தில் பவளக்காரன் தெரு. அந்தப் பவளக்காரன் தெருவில் ஏழாம் நம்பரில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டில் ஒரு நான்கு பேர் கூடினார்கள்.
அந்த நான்கு பேர் கூடி, நாம் அரசியலை நாட போகிறோம். அரசியலைத் தொட போகிறோம். நாம் தான் ஆட்சிக்கு வருவோம், ஆட்சி பீடத்திற்கு வருவோம் என்று யாரும் சிந்திக்கவில்லை. அந்த நாலு பேர் கூடினார்கள். அந்த நாலு பேர் பேசி, செப்டம்பர் 18 ராபின்சன் பூங்காவில், ஒரு 27 பேர் அமரக்கூடிய ஒரு மேடையில், ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கம் நண்பர்களே என தெரிவித்தார்.