தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தை ஹரி ஹரிஷ் இயக்க, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் மற்றும் முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரொம்ப பதட்டமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன். இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. என்னைப் போன்று தான் என் பட குழுவினரும் இருப்பார்கள். நாளை உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை சமந்தாவின் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram