நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடும் விளைவுகளை சந்திப்பார் என எச்சரித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2024தேர்தலில் பார்ப்போம். நீங்கள் தனித்து நிற்பீர்களா, நானும் நிற்க்கிறேன், ஜெயலலிதா சமாதியில் சத்தியம் பண்ண தயாராக இருப்பீர்களா ? எம்ஜிஆர் சமாதியில் உறுதிமொழி எடுப்பீர்களா ?
ஒரு ரூபாய் கூட வாக்கிற்கு கொடுக்க மாட்டேன் என்று, நீங்கள் அப்படி செய்து என்னை வென்று காட்டுங்கள்.அதிமுகவிற்கு தனித்துப் போட்டியிட திராணி இல்லை, திமுகவிற்கு இருக்கா ? காங்கிரஸுக்கு இருக்கா ? பிஜேபிக்கு இருக்கா ? எனக்கு தனித்துப் போட்டியிட திராணி இருக்கிறது. ஏனென்றால் நான் இந்த வீரன்களோட பிள்ளை. வீர கூட்டத்தில் பிறந்தவர்கள் நாங்கள். நீங்க சோறை கூட்டத்தில் இருக்கீங்க.
ஆளாளுக்கு எல்லாரும் ஓடியாங்க. சிங்கம், புலி வரும் போது எல்லாரும் ஏன் மேல ஏறி படுத்துகோங்க. நான் பார்த்துகிறேன், பாதுகாப்பாக வச்சுகிறேன் என்பதை போல நாங்க இல்லை.. ஓர் ஆளாக இருந்தாலும் நின்று சண்டை செய்து சாவோம். ஏனென்றால் நாங்கள் கற்று வந்த பாதை அப்படி. தனித்து ஜெயலலிதா நின்று ஆட்சி அமைக்கவில்லையா ? 37இடம் பாராளுமன்றத்தில் தனித்து நின்று வெல்லவில்லையா ? என கேள்வி எழுப்பினார்.