Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆரின் வாரிசு நான் தான்…. இனிமேல் விஸ்வருப தரிசனம்…. கமல் அதிரடி விளக்கம் …!!

மக்கள் நீதி மைய்யத்தலைவர் எம்ஜிஆருக்கு நீட்சி என்று தெரிவித்து இருந்தார். இதற்க்கு, எம்ஜிஆருக்கு நீட்சி என்கிறீர்களே ?  எம்ஜிஆர் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி இருக்கிறது. அதற்கான கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். பிறகு நீங்கள் எப்படி MGRயை சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்விக்கு கமல்ஹாசன், நான் எம்ஜிஆரின் கட்சிக்கு நீட்சி என்று சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு நீட்சி என்று தான் சொல்லி இருக்கிறேன்.

எந்த ஒரு நடிகனும் சொல்லலாம். மக்கள் திலகம் என்று அவர் கொடுத்தார்களே தவிர திமுக திலகம் என்ற பெயர் கொடுக்கவில்லை. அதிமுக திலகம் என்று சொல்லவில்லை மக்கள் திலகம் என்று தான் சொன்னார்கள். எனவே நான் உட்பட எந்த ஒரு நடிகரும் அவரை சொந்தம் கொண்டாட முடியும். எம்ஜிஆருக்கு வாரிசு நான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கமல் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு புதுச்சேரி மக்கள் நீதி மைய்யத்துக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்ட நிலையில் தமிழக மக்கள் நீதி மய்யத்துக்கு அந்த சின்னம் வழங்காததற்கு விஸ்வரூப தரிசனம் காட்டப்போகிறேன் என்று கமல் தெரிவித்தார். யாரிடம் காட்ட போகிறார் ? என்ற கேள்விக்கு,  நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், நம்புகிறோம்.

ஆனால் எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் எந்த காரணத்துக்காக செயல்படுகின்றார்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டரீதியான அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்போம். விஸ்வரூப தரிசனம் என்பது சட்ட ரீதியாக தங்களது டார்ச்லைட் சின்னத்தை பெறுவதற்கான முயற்சியாக இருக்கும் என கமல் விளக்கம் அளித்தார்.

Categories

Tech |