Categories
உலக செய்திகள்

நடு ரோட்டில்…. பெரிய கத்தியை வைத்து வழிப்பறி செய்த நபர்… காரை ஏற்றி பிடித்த போலீஸ்… வெளியான வீடியோ காட்சி!

கனடாவில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் விரட்டிச் சென்று காரை ஏற்றி பிடித்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கனடா நாட்டின் டொராண்டோ பாதுர்ஸ்ட் மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே மக்கள் அனைவரும் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்கள் அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில், சந்தேகநபர் ஒரு பெரிய கத்தியுடன் ஒருவரை நடுரோட்டில் அடித்து தள்ளி விட்டு பின்னர் அவரிடம் இருந்த பையை பறித்து செல்ல முயன்றார். அப்போது காரில் வந்து இறங்கிய போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு, அந்த திருடனை விரட்டிச் சென்றனர்.

Toronto Police Chase Video Shows Suspect Getting Hit By A Cruiser ...

அவன் கையில் பெரிய கத்தி வைத்திருந்தபோதும் போலீசார் தொடர்ந்து விரட்டினர்.10க்கும் மேற்பட்ட போலீசார் அவனை சுற்றி நெருங்கிக் கொண்டே போகும் போது,  இறுதியில்  போலீசார் காரை வைத்து மோதியதில் அவன் காயமடைந்து தரையில் சுருண்டு விழுந்தான். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |