முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிபா மரணமடைந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆபாச பட நடிகையான மியா கலிபாவின், முகநூல் பக்கம், திடீரென்று நினைவஞ்சலி பக்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், மியா கலிபாவை நினைவு கூறுவதாக பதிவுகள் வெளியிடப்பட்டது. இது, ரசிகர்கள் அதிர்ச்சியடைச் செய்தது. இந்நிலையில், மியா கலிபா நான் நலமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
— Mia K. (@miakhalifa) January 30, 2022
அதே சமயத்தில், அவரின் முகநூல் பக்கத்தை யாரும் ஹேக் செய்துவிட்டார்களா? என்பது தெரியவில்லை. இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் வருடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி வேகமாக பரவியது. அதன்பின் அவர் இதே போன்று விளக்கம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.