உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அம்மாவுடைய திருவுருவுச்சலைக்கு 17ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே மாலை அணிவிக்கப்பட வேண்டும். எனவே அதுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற வகையில் இன்று காலையிலே PWD நிர்வாகப் பொறியாளரிடம் நானே பேசினேன்… அவர் 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரியாக 12 மணிக்கு நாங்களும் வந்துட்டோம். ஆனா சீட்ல ஆள் இல்லை. அதுக்குள்ள என்ன ஆச்சு ?
எங்கன்னு கேட்டா, தெரியலன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் ஒரு எக்ஸிகியூட்டி இன்ஜினியரையே தேடுற அளவுக்கு இருக்கு. தமிழ்நாட்டினுடைய முன்னாள் சபாநாயகர், தமிழ்நாட்டின் உடைய 15 வருடம் மந்திரி, தமிழ்நாட்டுக்கு… ராயபுரம் சட்டமன்றத்தின் தொடர்ந்து ஐந்து முறை, 25 வருஷம் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். நானே வந்து எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியரை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்குன்னா, பெட்டிஷன் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்குன்னா…
இந்த விடியாத அரசுல, எப்படிப்பட்ட நிலைமை இருக்குன்னு பார்த்துக்கோங்க . அதனால் அதற்கு மேல் சிஇ இருந்தார். சிஇ கொஞ்சம் தயக்க பட்டார். நான் சொன்னேன், தயக்கப்படாதீங்க. அம்மாவுடைய திருவுருச்சிலைக்கு மாலை அணிவிக்கணும்னு சொல்லிட்டு, சட்டத்தை மதிக்கணும் என்ற அடிப்படியில் கடிதம் உங்களுக்கு கொடுக்கிறோம், இத்தேவி ஏற்று அனுமதி கொடுங்க என சொன்னோம். அவரும் அதை வாங்கி வச்சுட்டாரு. வாங்கி வச்சுட்டு அக்னாலேஜ்மென்ட் கொடுத்துட்டாரு.
என்னவென்றால் அப்பாயின்மென்ட் கொடுத்துவிட்டு, அவர் 12 மணிக்கு சீட்டிலே இல்லை என்று சொன்னால்… ஒரு அற்பமான, கீழ்த்தனமான, வஞ்சக எண்ணத்தோடு செயல்படுகின்ற அரசு என்பதை நிச்சயமாக இது மூலமாக பார்க்க முடியும். ஒரு பெட்டிஷன் வாங்குவதற்கு இப்படியா பண்ணுவது. இஇ என்ன பண்ணி இருப்பாரு ? பயந்துகிட்டு போய் மேலே கேட்டு இருப்பாரு. இன்னைக்கு ஜெயக்குமார் வருகிறார், எதோ என்னை பார்க்கணுமாம் என சொல்லி இருப்பாரு. அப்டியா..! 12 மணிக்கா ? நீ சீட்ல இருக்காதா போய்டு என சொல்லி இருப்பாரு. சீட்ல இல்லை.. அப்டினா ஒரு சாதாரண பிரஜைக்கு எப்படி இருக்கும் பாருங்க என அதிருப்தியை தெரிவித்தார்.