Categories
அரசியல் மாநில செய்திகள்

பறி போய்டுமோனு பயமா இருக்கு…! டிடிவி தினகரன் பரபரப்பு ட்விட் …!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது

அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Categories

Tech |