உலகிலேயே ஜெர்மன் நாட்டில் முதல் தடவையாக ஹைட்ரஜன் மூலம் செயல்படக்கூடிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டில் முதல் தடவையாக முழுவதுமாக ஹைட்ரஜன் மூலமாக மட்டும் இயங்கக்கூடிய ரயில் பாதை திறக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் லோயர் சாக்சோனி என்னும் மாநிலத்திற்கு, Alstom என்ற பிரஞ்சு தொழில் துறை நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய 14 ரயில்களை கொடுத்திருக்கிறது.
ப்ரெமர்வோர்ட் மற்றும் பக்ஸ்டெஹுட், குக்ஸ்ஹேவன், ப்ரெமர்ஹேவன், ஆகிய நகர்களை சேர்க்கக்கூடிய நூறு கிலோமீட்டர் பாதையில் இந்த ரயில்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, இன்றிலிருந்து அந்த பாதையில் ஹைட்ரஜன் ரயில்களில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Alstom நிறுவனம், இத்திட்டமானது, பல மில்லியன் யூரோக்கள் முதலீட்டை கொண்டது. மேலும், இரண்டு நாடுகளிலும் 80 ஊழியர்களுக்கு பணி வாய்ப்புகளை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளது.