திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் சாலையில் ஜெயபால்(51), அவரது மனைவி இந்திரா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயபால் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திராவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதில் இந்திரா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கு 2 வருடங்களாக திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கொலை வழக்கிற்கு நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜெயபால் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மனைவியை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதித்துள்ளனர்.