குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை அடுத்துள்ள சிப்காட் பெல் ஊரகத்தில் இருக்கும் குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ் குமார்-ஆஷா குமாரி தம்பதியினர் அயோக்குமார் என்ற ஐந்து வயது மகனும் இருக்கின்றான். அகிலேஷ் குமாரின் தாய் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அகிலேஷ் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் மகன் சரியாக சாப்பிடுவதில்லை எனவும் இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். எப்போதும்போல் நேற்று முன்தினமும் இருவரிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ஆஷா குமாரி காய்கறி வெட்டும் கத்தியை வைத்து கணவனை குத்தி உள்ளார் இதில் பலத்த காயம் அடைந்த அகிலேஷை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஆஷா குமாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.