குடித்துவிட்டு போதையில் தகராறு செய்த கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி, மகள் மற்றும் துணையாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் தனசேகரன். இவர் சின்னகள்ளிபட்டு பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.
இந்த விசாரணையில், தனசேகரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் மகளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகள் சத்யா ஆகிய இருவரும் முருகவேல் என்ற இளைஞருடன் சேர்ந்து தனசேகரனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.