Categories
தேனி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற கணவர்… பார்க்க சென்ற மனைவிக்கு ஏற்பட்ட கதி… குடும்ப தகராறால் விபரீதம்…!!

தேனி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற கணவரை பார்க்க சென்ற மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவில் முருகன்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழில் செய்யும் இவருக்கு ஜான்சிராணி(38) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு சிவகங்கையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்த முருகன் நேற்று முன்தினம் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உத்தமபாளையம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கணவர் தற்கொலைக்கு முயன்றதை அறிந்த ஜான்சிராணி உடனைடிய கணவனை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது ஜான்சிராணி கணவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென முருகன் அருகில் இருந்த பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஜான்சிராணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவர்கள் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |