மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சங்கரன்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த வீராசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பா இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கேரளத்தில் பணிபுரியும் வீராசாமி அடிக்கடி கேரளா செல்வதால் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்டு தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய வீராச்சாமி மனைவியிடம் சண்டை போட்டுள்ளா.ர் நீண்ட நேரம் நடந்து சண்டையினால் கணவன் மனைவி இருவரும் நள்ளிரவில் தான் தூங்க சென்றனர். தூக்கம் வராமல் யோசனையில் இருந்த வீராசாமி அதிகாலை 3 மணி அளவில் தன் மனைவியை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததை பார்த்த வீராச்சாமி சட்டையில் ரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். பின்னர் வீராச்சாமி அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பாப்பாவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னரே கொலை நடந்த விஷயம் அக்கம்பக்கத்தினர் தெரியவந்தது.
வீராசாமியை கைது செய்து வீராசாமி கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.