உகாண்டா நாட்டில் ஷேக் முதும்பா இமாம் என்ற இளைஞருக்கும் சுவாபுல்லா நிபுரா என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு சுவாபுல்லா நிபுரா கணவருடன் நெருக்கமாக இருக்க மறுத்து வந்தார். மனைவிக்கு மாதவிடாய் என்று எண்ணிய ஷேக் முதும்பா இமாம் பொறுமை காத்தார். அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் வீட்டிலிருந்து பொருட்கள் திருடு போக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் பார்வை சுவாபுல்லா நிபுரா மீது விழுந்ததையடுத்து அவர்கள் சோதனையிட்டதில் போலீசுக்கு மட்டுமல்லாமல் கணவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அது பெண் இல்லை என்று தெரியவர போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ரிச்சர்ட் துமுஷபே என்று தெரியவந்தது. ஆண் தான் பெண் வேடமிட்டு அனைவரையும் ஏமாற்றி உள்ளார் .
இதையடுத்து ரிச்சர்ட் மீது திருட்டு குற்றம் சாட்டப்பட்டது மட்டுமல்லாமல் ஷேக் முதும்பா இமாம்க்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டது.உகாண்டாவில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்பதால் ஷேக் முதும்பா இமாம் போலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் அவருடைய வாழ்க்கையே பறி போனது.