Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மினி ஆட்டோ பைக் மீது மோதி விபத்து… மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக மரணம்..!!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஏற்பட்ட விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கோவை மாவட்டம் சின்ன கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் ராமுலு.. 52 வயதுடைய இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தம்பதியர் இருவரும் பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆனைமலை அடுத்துள்ள பால்பண்ணை சண்முகாபுரம் அருகே மினி ஆட்டோ ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது.

அப்போது பைக்கும், மினிஆட்டோவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் கணவர் நாகூர் ராமுலுக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.. அவரது மனைவியும் காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸூல், கணவன் மனைவியை மனைவியை ஏற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாகூர் ராமுலு பரிதாபமாக பலியானார். அவரது மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

இந்தசம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |