Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலன் கொலை முயற்சி – கணவன் மனைவி கைது

கள்ளக்காதலை கண்டித்து கணவன் மனைவி சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

ஆலந்தூர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுசாலி முஸ்தபா ருஸ்தானா பேகம் தம்பதியினர். முஸ்தபா மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தஜ்மல் அகமது நண்பர்களாக பழகி வந்துள்ளனர். முஸ்தபா வீட்டில் இல்லாத சமயம் அஜ்மல் அகமது நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் மனைவி ருஸ்தானா பேகத்துடன் பழகி வந்துள்ளார். வெகுநாட்களாக பழக்கம் நீடித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதுபற்றி அறிந்த அபுசாலி முஸ்தபா இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது ருஸ்தானா பேகம் என்னை வலுக்கட்டாயமாக தவறு செய்ய வைத்தார் என கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தஜ்மல் அகமதுவை வீட்டிற்கு வரவழைத்து அபுசாலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் நண்பர்கள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தஜ்மல் அகமதுவை கத்தியால் குத்தி உள்ளனர். பின்னர் கத்திக்குத்து பட்டு படுகாயமடைந்த தஜ்மல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிந்து அபுசாலி முஸ்தபா மற்றும் அவரது மனைவி ருஸ்தானா பேகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |