மனைவியை பிரசவத்திற்கு அனுமதித்த மருத்துவமனையில் கணவர் மருத்துவரின் காதை கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒடிசா மாநிலத்தில் இருக்கும் என்.கே.ஜி.சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணிற்கு பிரசவ அறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அறையின் வெளியே நின்ற பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியில் செல்ல கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண்ணின் கணவர் தரணி பிரசாத் பெண் மருத்துவர் ஸ்ம்ருதியை தாக்கிவிட்டு மற்றொரு மருத்துவரின் காதை கடித்துள்ளார். இதில் மருத்துவரின் காதில் சிறிய பகுதி துண்டாகி உள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் கணவரை பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவர் மருத்துவரின் காதைக் கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.