பசியால் வாடும் குழந்தைகள் முன்பு உணவு இல்லாததால் கற்களை சமைப்பது போன்று தாய் நடித்துள்ளார்
கென்யாவில் கடற்கரை நகரான மொம்பாசாவில் கணவரை இழந்து எட்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தாயான பெனினா பஹட்டி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் வறுமையில் சிக்கி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். குழந்தைகள் பசியுடன் உணவு கேட்கும் சமயம் கற்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி சமையல் செய்வது போன்று குழந்தைகள் முன்பு நடித்து ஏமாற்றியுள்ளார்.
உணவு தயாராகிவிடும் என காத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் பசி மயக்கத்தில் உறங்கும் வரை சமைப்பது போன்று குழந்தைகள் முன் நடித்துள்ளார் அந்த தாயார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பலரும் தங்களால் முடிந்த உதவியை பெனினாவுக்கு செய்து வருகின்றனர். தனக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்த பெனினா நடப்பவை அனைத்தும் ஒரு அற்புதம் போன்று தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.