உலக அளவிலான பட்டினி குறியீடு பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம்,இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.ஒரே ஆண்டில் இந்தியா 6 இடங்கள் பின் தங்கியுள்ளது. வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளை விட இந்தியா பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் இந்த பட்டியல் தவறானது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது. மேலும் நாட்டின் பிம்பத்தை கொடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதி என்றும் இதனை விமர்சித்துள்ளது.