Categories
தேசிய செய்திகள்

மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு – காரைக்காலில் கருப்பு கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம்!

காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க நிபந்தனைகளும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் அனுமதியை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் 64 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கருப்பு கொடி ஏந்தி மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 49ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ள நிலையில் போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Categories

Tech |