Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே….! “சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை”…. உயிரிழந்த நிலையில் போலீசார் மீட்பு….!!!!!

பல்லடம் அருகே பெண் குழந்தையின் உடல் சாலையோரம் வீசப்பட்டிருந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இருக்கும் தெற்கு பாளையம் ப்ராமிஸ் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று இந்த குடியிருப்புக்கு பின்பகுதியில் இருக்கும் காலி இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குப்பையை கொட்டுவதற்காக வந்தபோது சாலையோரம் ஈக்கள் மொய்த்தப்படி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டார்கள். அந்த குழந்தை சுமார் ஏழு மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பது தெரிய வந்தது. பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மோகன் தாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |