Categories
தேசிய செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்கள்…. வீரர்கள் தேர்வு தொடங்கியது…..!!

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வரக்கூடிய 2022ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.அமெரிக்கா , ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள்  விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவும் இணைய உள்ளது. இஸ்ரோ_வின் ககன்யான் திட்டத்தின் மூலம்  வருகின்ற 2022-ஆம் ஆண்டு 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றார்கள். அதற்காக விண்வெளி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட பணி நிறைவடைந்துள்ளது.

மொத்தம் 30 விண்வெளி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பி  அங்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து அதில் மூன்று பேரை மட்டும் இறுதியாக ராக்கெட்டில் வைத்து விண்வெளிக்கு அனுப்ப கூடிய ஒரு திட்டம்தான் ககன்யான்.விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கு இஸ்ரோ ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு ரஷ்யா உதவி செய்ய முன் வந்து இருக்கிறது.

அதற்கான பயிற்சிகளை நம்முடைய விண்வெளி ஆய்வாளர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் விண்வெளி செல்ல இருக்கும் வீரர்களுக்கு  உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பரிசோதனை செய்யப்பட்ட இருக்கின்றன. இவர்களை மருத்துவர் பரிசோதனை செய்து இவர் விண்வெளியில் சென்றால் வாழ முடியுமா அதற்கான தகுதிகள் இருக்கிறதா என்பது போன்ற உடல்ரீதியான சோதனைகளை மேற்கொள்வார்.இதில்  இந்திய விமானப் படை வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |