Categories
தேசிய செய்திகள்

மனித நேயம் எங்கே போச்சு… உயிருக்கு போராடுனவங்கள காப்பாற்றாம… இப்படியா செய்றது…. என்ன உலகம்…!!!

மராட்டிய மாநிலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்த விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பொருட்களை அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம்,உஸ்மானாபாத் என்ற நகரில் சோலாப்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கண்டெய்னர் லாரியில் விலை உயர்ந்த செல்போன், கணினிகள், டிவிகள், பொம்மைகள் மற்றும் மின்னணு பொருள்கள் இருந்தது. அவை விபத்து காரணமாக லாரியில் இருந்து வெளியே வந்து கிடந்தது. அதை கண்ட அப்பகுதி மக்கள் லாரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றாமல், அதிலிருந்த பொருள்களை சுருட்ட தொடங்கியுள்ளனர்.

இதில் சிலர் லாரியின் கதவை உடைத்து உள்ளே உள்ள பொருட்களையும் எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து லாரிக்கு பாதுகாப்பு வழங்கினார். போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சிலர் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை கொண்டு வந்து ஒப்படைத்தனர். ஆனாலும் 70 லட்சம் மதிப்பு கொண்ட பொருள்கள் திருடப்பட்டுள்ளது. அதில் 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. மற்றவற்றை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |