ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு எப்படி விருது கிடைத்தது என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே அனைவரிடமும் பேசுவார். மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
தேசிய விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் இப் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுக் குழுவில் ஜூரியாக இருந்த பிரபல பாடகர் கங்கை அமரன் ஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த விருதுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஒத்த செருப்பு படத்திற்கு எந்த பிரிவிற்கு விழுதுகள் கொடுப்பது என்று தெரியாமல் அனைவரும் குழம்பிப் போயிருந்தோம். ஏனென்றால் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் ஆகிய அனைத்தையும் பார்த்திபனே செய்துள்ளார். ஆகையால் இப்படத்திற்கு நாங்கள் சிறப்பு தேசிய விருது அளிக்க முடிவு செய்து அறிவித்துள்ளோம்” கூறியுள்ளார்.