* மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.
* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள்.
* தினசரி கைகளை நீட்டுவது, கால்களை விரிப்பது, யோகாசனங்கள் போன்ற உடற்பயிற்சிகளை உடன் இருந்து சொல்லிக்கொடுங்கள்.
* சாமி கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக… ஒரே இடத்தில் அமரச் செய்து… தியானம் செய்ய வைக்க முயலுங்கள்.
* ஒவ்வொரு நல்ல பழக்கமாக நிதானமாக கற்றுக்கொடுங்கள். அவசரப்படவேண்டாம்.
* உறவினர்கள், நண்பர்கள் மூலம் உங்கள் குழந்தைகளை கண்டிக்க சொல்லுங்கள், கட்டுப்படுவான்.
மொத்தத்தில் மனரீதியாக மெது, மெதுவாக அவனை திருத்தப்பாருகள்! அதுவே அவன் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.