Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஆதாரத்தை அடுக்கிய எடப்பாடி…! கண்டு கொள்ளாத சபாநாயகர்… ஓபிஎஸ்-சுக்கு செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்,  கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம்.

இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய அறையிலே சந்தித்து, முழுமையாக விளக்கமாக தெளிவாக நாங்கள் எங்களுடைய நியாயத்தை தெரிவித்து இருக்கின்றோம். இதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்கொள்ள முடியாத திராவிட முன்னேற்றக் கழக தலைவர்,

கொள்ளை புறத்தின் வழியாக,  சட்டமன்ற பேரவை தலைவரின் மூலமாக, இன்றைக்கு எங்களை பழிவாங்க பார்க்கின்றார், ஒருபோதும் நடக்காது. என்றைக்கும் நீதி தர்மம் உண்மைதான் வெல்லும். அதுதான் வரலாறு. அதை வேண்டுமென்றே திட்டமிட்டு, முன்கூட்டியே இவர்கள் செய்த சதி திட்டங்கள் அம்பலமாக இருக்கின்றன. நாங்கள் பலமுறை ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கையின் வாயிலாக தெரிவித்து வந்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக எங்களுடைய கட்சியில் இருக்கின்ற உயர்ந்த பொறுப்பாளர் ( ஓபிஎஸ் ) செயல்பட்டு வருகிறார் என்பதை நாங்கள் ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தது, இன்றைக்கு உண்மையாகி விட்டது.

கட்சியினுடைய நிலைப்பாடு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு கூட்டப்பட்டு,  11/7/2022 நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று,  உயர் நீதிமன்ற உத்தரவை பெற்று எங்களுடைய கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையிலேயே திரு ஓபிஎஸ் அவர்கள், திரு வைத்தியலிங்கம் அவர்கள் திரு மனோஜ் பாண்டி அவர்கள் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதை எதிர்த்து திரு ஓபிஎஸ் அவர்களுடைய உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்தார்கள். திரு ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அந்த மேல்முறையீட்டிலும் அவர்களுக்கு தடை ஆணை வழங்கவில்லை. ஆக  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது குழுவின் கூட்டத்திலே தீர்மானத்தின் மூலமாக அவர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று இன்று வரை இருக்கின்றது. அதை எல்லாம் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை சட்டப்பேரவை தலைவர் அவர்கள்..  அதற்குண்டான ஆதாரத்தை நாங்கள் கொடுத்து விட்டோம்.

நீதிமன்றத்தில் உத்தரவை, தீர்ப்பை சட்டமன்ற பேரவை தலைவர் அவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். அதையெல்லாம் அவர் பார்க்கவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக சட்டப்பேரவை தலைவர் அவர்கள்…  ஓபிஎஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் என்று அறிவிக்கின்றாரா. ஆக நீதிமன்ற தீர்ப்பையே சட்டப்பேரவை தலைவர் அவர்கள் மதிக்கவில்லை என்பது தான் புலப்படுகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |