நல்ல தூக்கம் தூங்க என்ன செய்வது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பணிபுரிய தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஜவுளிக்கடை உள்ளிட்ட தனி கடைகளை நடத்தி வரும் சிறு வியாபாரிகளுக்கும், பல தொழில் நிறுவனங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வியாபார மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் வெளியில் வேலைக்குச் செல்பவர்களுக்கும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பலர் தங்களது வாழ்வியல் முறை முற்றிலும் மாறி விட்டதாகவும், இதன் காரணமாக தூக்கம் நேரம் மாறி, நல்ல தூக்கத்தை இப்போது பெறுவதில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு சிறந்த வழியாக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மக்கள் மேற்கொள்வதன் மூலம் மன நிம்மதி அடைந்து, எந்த ஒரு குழப்பத்தையும் மூளைக்கு ஏற்றாமல் நன்றாக தூங்கலாம். அதேபோல், தூங்குவதற்கு முன் எந்த ஒரு ஒளியையும் அறைக்குள் அனுமதிக்க விட கூடாது.
செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அணைத்து வைத்துவிட வேண்டும். அதேபோல், தூங்குவதற்கு முன் காபி, டீ உள்ளிட்டவற்றை அருந்தக்கூடாது. அவ்வபோது குட்டித் தூக்கம் தூங்கி எழாமல், ஒரே நேரத்தில் தூங்கி எழ பழகவேண்டும். தூங்கும் முன் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தர கூடிய ஒரு அமைதியான விஷயத்தை நினைத்து கொண்டே கண் மூடினால் எப்போது தூங்கினீர்கள் என்பதும் தெரியாது, தேவையற்ற கனவும் தூக்கத்திற்கு தடையாக இருக்காது.
இவ்வாறு செய்தால் போதும், தடைபடாத நல்ல தூக்கத்தைப் பெறலாம். நல்ல தூக்கம் மட்டுமே ஒரு மனிதனுக்கு சந்தோஷமான சுகமான ஒரு விஷயம். தூக்கத்தை இழந்தவர்கள் துன்பங்களையும், கஷ்டங்களையும் தேடிக் கொண்டு, மன நிம்மதியை இழந்து தான் திரிவார்கள். எனவே நல்ல தூக்கம் தூங்கி எழுந்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும்