Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேர்க்கடலை தட்டை செய்வது எப்படி ….

வேர்க்கடலை தட்டை
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை –  1 கப்
பொட்டுக்கடலை –  1 கப்
கடலை மாவு –  1 கப்
அரிசி மாவு –  1  கப்
மிளகாய்த் தூள் – 2  தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – சிறிதளவு
வெண்ணெய் – தேவையான அளவு
உப்பு ,  எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
வேர்க்கடலை தட்டை க்கான பட முடிவுகள்
செய்முறை:
முதலில்  வேர்க்கடலையை  லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை  மாவு , வேர்க்கடலைமாவு , அரிசி மாவு, கடலை மாவு ,  உப்பு , பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் ,  வெண்ணெய்  சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்  தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான வேர்க்கடலை தட்டை  தயார் !!!

Categories

Tech |