பாய் வீட்டு நெய் சோறு
தேவையானபொருட்கள் :
பல்லாரி – 2
சின்னவெங்காயம் – 4
தக்காளி – 1 சிறியது
பட்டை – 4
கிராம்பு – 6
ஏலக்காய் – 6
ரம்பை இலை – 2
பச்சைமிளகாய் – 3
பாசுமதி அரிசி – 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன்
புதினா ,கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் அரிசியை 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை , கிராம்பு , ஏலக்காய் , ரம்பை இலை , சின்னவெங்காயம் , வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வரவேண்டும் . பின் தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பச்சை வாசனை போனதும் புதினா ,கொத்தமல்லி இலை, தயிர், முந்திரி சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் , உப்பு மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் 20 நிமிடங்கள் தம் போட்டு , புதினா மற்றும் நெய் சேர்த்து இறக்கினால் சூப்பரான நெய் சோறு தயார் !!!
குறிப்பு : 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவேண்டும் .