தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் கருவாடு 200 கிராம்,
பெரிய வெங்காயம் 2,
தக்காளி 2,
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்,
மல்லித்தூள் 1 ஸ்பூன்,
உப்பு நல்லெண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
1. கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பொடிதாக நறுக்க வேண்டும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி அத்துடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
3. நன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள கருவாடு போட்டு வதக்கி ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் சேர்த்து நன்கு வெந்த பிறகு இறக்கி வைக்க வேண்டும்.
கருவாடு தொக்கு ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.