Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கோடைக்கால சரும பிரச்சனைகளில் இருந்து உங்கள் அழகை பராமரிப்பது எப்படி? 

  • கோடைக்காலத்தில் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. 
  • முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று விட்டு வந்தால் மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள்.
  • வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளை பயன்படுத்தலாம்.
  • வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். 
  • தோல் வறண்டு விடாமல் தடுக்க தர்பூசணி பழத்தில் கொஞ்சம் பால், சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்கள் வைத்திருந்து முகத்தைக் கழுவிவிடுங்கள்.
  • வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். 
  • ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். 
  • சருமத்துக்கு தேன் கலந்த முக பேக் நல்லது. இரண்டு ஸ்பூன் தேனில், சிறிதளவு முல்தானிமெட்டி பவுடர் போட்டு நன்றாக பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு கழுவுங்கள். 
  • வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். 
  • கோடை காலத்தில்  சோப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். தேவைப்பட்டால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற பேஷ் வாஷ் பயன்படுத்தலாம்.

Categories

Tech |