கொரோனாவில் இருந்து தப்பிக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.
இன்று முதல் நாடெங்கும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பல தளர்வுகளையும் கொடுத்துள்ளது. அந்த வகையில் முக்கியமாக பொதுப்போக்குவரத்து மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படும் என்றும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, நூலகங்கள் திறப்பு, பூங்கா, மால்கள் சூட்டிங் இவற்றிற்கு அனுமதி போன்ற பல்வேறு தளர்வுகளை வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வண்ணம் செயல்படுத்துமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் எவற்றையெல்லாம் கடைபிடித்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறித்து காண்போம்.
- அலுவலகத்திற்கோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- அடிக்கடி கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- வீட்டிற்குத் திரும்பியதும் கட்டாயம் குளித்துவிட்டு செல்ல வேண்டும்.
- நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் கட்டாயம் அடிக்கடி கபசுர குடிநீர் அருந்த வேண்டும்.
- கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியையும் நுரையிரல் பிரச்சினைகளையும் முடிந்த அளவு கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- மேலும் வெளியில் செல்லும் பொழுது தனிநபர் இடைவெளி என்பது கட்டாயம் தேவை. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
- பார்க்கின்ற இடங்களில் எச்சில் துப்பக் கூடாது ஏனென்றால் அது மிகவும் ஆபத்து தரக்கூடிய ஒன்றாக இந்த கால கட்டத்தில் உள்ளது.
- நண்பர்களாக இருந்தாலும் சற்று விலகி நிற்க வேண்டும்.
- பெரிய விழாக்கள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும்.
- இந்த உலகில் அனைத்தையும் அடக்கி ஆளும் சர்வாதிகாரம் மனிதன் ஒருவனுக்கே என்பதை உணர்ந்து கொரோனாவுடனான யுத்தத்தில் வெற்றி காண்போம்.