ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த செய்தி ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு நிம்மதி அளித்தது. ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு கட்டாயம் சேர்க்க வேண்டும்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் சுமார் 80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில் கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு தேவையான ஆவணங்கள்.
குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ், ரேஷன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல்.
மேற்கூறிய ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் உடன் ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால் அதையும் எல்லாம் எடுத்து அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று செல்லவும். இவற்றையெல்லாம் சமர்ப்பித்தால் ஆதாருடன் ரேஷன் கார்டு இணைக்கப்படும்.