ஹோட்டல் ஸ்டைல் மொறுமொறு தோசை
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1/2 கப்
புழுங்கலரிசி – 1 1/2 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1/2 கப்
அவல் – 1/2 கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை :
அரிசி , உளுந்து மற்றும் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியே அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் இவைகளை கலந்து 8 மணி நேரம் புளிக்கவிட்டு உப்பு, சர்க்கரை மற்றும் ஊறவைத்து அரைத்த அவல் சேர்த்து கலந்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஹோட்டல் ஸ்டைல் மொறுமொறு தோசை தயார் !!!