நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம். குழந்தைகள் தினம் அன்று அவர்களை சிறப்பாக உணர வைப்பதற்கு சில வழிகள் இருக்கிறது. அவை,
- குழந்தைகள் தினத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர்களின் அறைகளை பலூன்கள், சுவரொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும். இதனையடுத்து குழந்தைகளுக்கு பிடித்தமான பொம்மைகள், அறிவுபூர்வமான வாசகங்களை எழுதி சுவரில் ஒட்டி குழந்தைகளை அறைக்கு அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்த வேண்டும்.
- இரண்டாவதாக குழந்தைகளிடம் உங்களுக்கு பிடித்தமான ஓவியத்தையோ, கவிதையையோ காட்சிப்படுத்துங்கள் எனக்கூறி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக பேச வேண்டும்.
- ஆடம்பரமான ஆடை போட்டி: அன்றைய தினம் குழந்தைகளுக்கு முக்கிய தலைவர்களின் உடை மாதிரிகளை அணிவித்து, தலைவர்களின் சிறப்புகள், தலைவர்களின் தியாகங்கள், கல்வியின் முக்கியத்துவம், குறித்து எடுத்துரைக்கலாம்.
- குடும்ப பயணம்: அன்றைய தினத்தில் குழந்தைகளுடன் எங்காவது அருகில் இருக்கும் கடற்கரைக்கு சிறிய பயணமாக செல்லலாம். குழந்தைகளுடன் நாள் முழுவதும் பேசி, சிரித்து விளையாடி, அழகான நினைவுகளை உருவாக்கலாம். பின்னர் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம்.