Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகள்… தெரிந்து வைக்க வேண்டிய குறிப்பு…!!

காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் பற்றிய தொகுப்பு

காய்கறிகளை தோல் சீவும் முன்பே தண்ணீரில் சுத்தம் செய்துகொள்வது அதில் இருக்கும் சத்துக்களை போகாமல் தடுக்க உதவும்.

காய்கறிகளில் தோல் சீவும் பொழுது முடிந்த அளவு மெலிதாக சீவ வேண்டும். இதனால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாவதை தடுக்க முடியும்.

உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைப்பதினால் அதன் நிறம் மாறுவதை தடுக்கலாம்.

காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை குழம்பு வைக்க பயன் படுத்தலாம்.

ஆப்பிள்கள் வெட்டிய பின்னர் நிறம் மாறுவதை தடுக்க வெட்டிய பக்கத்தில் எலுமிச்சை சாரை தடவினால் நீண்ட நேரம் ஆப்பிள் புதிதாக இருக்கும்.

பச்சை மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு வைத்தால்  நீண்ட நாட்கள் புதிதாக இருக்கும்.

வெங்காயத்தில் தோலை உரித்து பாதியாக வெட்டி தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

Categories

Tech |